நத்தம் கல்லூரியில் ஜூனியர் தடகளப் போட்டிகள்- ஆர்வமுடன் பங்கேற்பு
நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில், 2-ம் நாளாக மாநில அளவிலான 35-வது ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் மாநில அளவில் 35-வது ஜுனியர் தடகள போட்டி 2-ம் நாளான நேற்று நடந்தது. மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
குறிப்பாக பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், மற்றும் போல்வால்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்று, முதல் மூன்று இடங்களைப் பிடித்த, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, முதல் பரிசாக தங்க பதக்கம், இரண்டாவது பரிசாக வெள்ளிப்பதக்கம் மற்றும் மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கங்களை, மாநில தடகள சங்க செயலாளர் லதா உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.
இப் போட்டியில், சிறப்பு விருந்தினராக உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.