திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வருகை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திண்டுக்கல் வருகை தந்தார்.

Update: 2021-07-10 12:54 GMT

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி கலந்துகொண்ட நிகழ்ச்சி.

வைரஸ் தொற்று மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்காக 100 படுக்கை வசதிகள் துவக்கப்பட்டு அதில் 30 வெண்டிலேட்டர் 70 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தலைக்காயம் பிரிவு நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் உடனடியாக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியில் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று வருகை தந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு, கொரோனா கூடுதல் பரிசோதனை கருவிகள் மையம் திறப்பு, கருவுற்ற தாய்மார்கள் மற்றும் திருநங்கைகளுக்கான கொரோனா தடுப்பு ஊசி திட்டம் உள்ளிட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆய்வுக்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது:-

தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையானது வரக்கூடாது என்பது தான் தமிழக அரசின் எண்ணம். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது ஆய்வு செய்து வருகிறேன். அதன்படி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 100 படுக்கை வசதிகள் கொண்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 70 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் 30 வெண்டிலேட்டர் படுக்கை வசதிகளும் இன்று துவக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைக்காயம் பிரிவு நரம்பு பிரிவிற்கு மருத்துவர்கள் உடனடியாக பணி அமர்த்தப்படுவார்கள். தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் 108 பணியாளர்கள் போன்றவர்களுக்கு முதல்வரின் ஆலோசனையை பெற்று நிரந்த பணி அல்லது பணி காலநீட்டிப்பு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனையில் வைரஸ் தொற்று காலகட்டத்தில் பேக்கேஜ் முறையில் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் அளித்தால் விசாரணை செய்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News