தனியார் தோட்டத்தில் இரு சாரை பாம்புகள் பின்னி பிணைந்து நடனம்
தாடிகொம்பு அருகே தனியார் தோட்டத்தில் இரு சாரை பாம்புகள் பின்னி பிணைந்து நடனமாடியதை ஆச்சர்யத்துடன் பார்த்த பொதுமக்கள்.;
சாரைப்பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடிய காட்சி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவிற்குட்பட்ட தாடிக்கொம்பு ஊராட்சி மாரம்பாடி அருகே பாத்திமா நகரில் மரிவலன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆண்-பெண் சாரைப் பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனம் ஆடியது.
இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாலரை அடிக்கும் மேல் உயரம் உள்ள இரு பாம்புகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பின்னிபிணைந்து நடனமாடியது.
இதுவரை சினிமாவில் மட்டுமே பாம்புகள் நடனமாடுவதை கண்ட மக்கள் தனியார் தோட்டத்தில் பின்னி பிணைந்து நடனமாடுவதை பயம் கலந்த ஆச்சர்யத்துடனே பார்த்தனர்.
பாம்புகள் நடனமாடுவதை அங்கிருந்த இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்தனர். மனிதர்கள் கூட்டம் கூடியதால் இரு பாம்புகளும் புதருக்குள் சென்று மறைந்தன.