திண்டுக்கல்லில் தெற்கு மாவட்ட பாமக அலுவலகம் திறப்பு விழா
திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 3 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று, திண்டுக்கல் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா ஆத்தூர் தொகுதி செம்பட்டியில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட தலைவர்கள் மணி, வைரமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி சந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.