துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்
பலர் உணவு அருந்திய நிலையில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்
திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இட வசதிகள் மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் வெட்டவெளியில் சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செபஸ்தியான் இவர் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த நிலையில் மூன்றாம் நாள் துக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டவர்களுக்கு பித்தளை பட்டியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து உணவுகள் சமைத்து வாங்கிக்கொண்டு வந்து உணவு பரிமாறப்பட்டுள்ளது.
இதில் பலர் உணவு அருந்திய நிலையில் இன்று காலை முதலே உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது வரை குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் பீட்டர் பிரேமா,, ஆரோக்கியம்மாள், சௌமியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் வெட்டவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வரக்கூடும் என்பதால் வட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.