சின்னாளப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

சின்னாளப்பட்டி அருகே கருப்பண்ணசாமி கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் குத்துவிளக்கு திருட்டு அம்பாத்துரை போலீசார் விசாரணை.

Update: 2022-01-07 09:38 GMT

பணத்தை திருடிவிட்டு மர்ம நபர்கள் வீசி சென்ற காேவில் உண்டியல்.

சின்னாளப்பட்டி அருகே கருப்பண்ணசாமி கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் குத்துவிளக்கு திருட்டு அம்பாத்துரை போலீசார் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே வெள்ளோடை அடுத்த சிறுநாயக்கன்பட்டி, கட்டழகன்பட்டியில் கும்பாபிஷேகம் முடித்து ஓராண்டு ஆன மாரநாடு கருப்பணசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோவில் உண்டியலை எடுத்து வந்து வெளியே வைத்து உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை கோவில் அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசி  சென்றனர். பின்னர் 40 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு குத்து விளக்குகளும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோயில் பூசாரி அம்பாத்துரை போலீசார் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்து சென்றுள்ளனர். உடைக்கப்பட்ட உண்டியலில் ஒரு வருட பணம் 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம் என கோயில் பூசாரி தெரிவித்துள்ளார். கோயில் உண்டியலை திருடி பணம் மற்றும் குத்து விளக்கை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News