பல ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி மறுகால் பாயும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம்

பல ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி மறுகால் பாயும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-10-24 04:09 GMT

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு பகுதிகளில் மழை பெய்தால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து இருக்கும்.

இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. திண்டுக்கல் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் திகழ்கிறது.

இதன் மொத்த உயரம் 23.5 அடி. திண்டுக்கல் மாநகரம் மட்டுமல்லாமல் சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

பொதுவாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காமராஜர் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாறை மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக அணை நிரம்பியுள்ளது.

மேலும் இந்த தொடர் மழையால் அணை நிரம்பி மறுகால் பாய்வதால் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்மாய்களும் நிரம்பும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News