தொடர் விடுமுறையால் சுற்றுலா தலமாக மாறிய அனுமந்தராயன் கோட்டை அணைமேடு

சுற்றுலா தலமாக மாறிய அனுமந்தராயன் கோட்டை அணைமேடு, குளித்து மகிழ பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

Update: 2021-11-07 07:17 GMT

அனுமந்தராயன் கோட்டை அணைமேடு நீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான ஆடலூர், பன்றிமலை, கே.சி. பட்டி, தடியன்குடிசை, பெரும்பாறை, புல்லாவெளி போன்ற பகுதிகளில் பெய்து வரும்  கனமழை காரணமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு  குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

மறுகால் பாயும் தண்ணீர் குடகனாறு ஆறு,  அனுமந்தராயன் கோட்டை, வேடசந்தூர் வழியாக சென்று கரூர் மாவட்டத்தில் முடிவடைகிறது. குடகனாறு செல்லும் வழிதடத்தில் அனுமந்தராயன் கோட்டையில் அணை மேடு பகுதியில் தண்ணீர் அருவி போல கொட்டுவதால் அதை பார்த்து ரசிக்கவும், குளித்து மகிழவும் பித்தளைப்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, திண்டுக்கல் மற்றும் வக்கம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி தொடர் விடுமுறையை கழிப்பதற்காக அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியுடன் குளித்து சென்றார்கள். 

Tags:    

Similar News