பாலக்கோடு அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியை சேர்ந்த அருண்பாண்டியன்,31 ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் குடும்பதகராறு காரணமாக அமுதாவை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு நேற்று அழைத்து சென்றனர். இதனால் விரக்தி அடைந்த அருண்பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பஞ்சப்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.