பாலக்கோடு அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கொன்று புதைப்பு; கணவன் கைது
பாலக்கோடு அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கொலை செய்து புதைப்பு கணவனை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை ஜோகிர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 55. இவரது மனைவி சின்னபாப்பா வயது 50. இவர்களுக்கு நாகராஜன், சக்திவேல் என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 29ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து விடியற்காலை 5 மணியளவில் சின்னபாபாப்பா வை அடித்து சேலையால் கழுத்தை இருக்கி கொலை செய்து பின்பு வீட்டின் பின்புறம் பன்றிகளின் கழிவுகளை கொட்டும் குழியில் சின்ன பாப்பாவின் உடலை புதைத்துள்ளார்.
இதனையடுத்து தாயை காணாமல் தவித்த மகன் நாகராஜன், தனது தந்தையிடம் கேட்டபோது முருகன் நடந்தவற்றை கூறியிருக்கிறார். இதனையடுத்து, நாகராஜன் தன் அண்ணன் சக்திவேலிடம் கூறவே இருவரும் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்தவற்றை கூறினார்கள்.
நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திர மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர் . சின்ன பாப்பாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.