தர்மபுரி மாவட்டத்தில் 4,472 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கல்

தர்மபுரி மாவட்டத்தில் 4,472 பேருக்கு ரூ.83.37 இலட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.

Update: 2021-12-02 02:21 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி.

தர்மபுரி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் கட்டுமானம், அமைப்புச்சாரா மற்றும் ஓட்டுநர் நலவாரியங்களின் உறுப்பினர்களாக பதிவு ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4472 உறுப்பினர்களுக்கு ரூ.83.37 இலட்சம் மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண நிதியுதவி, கல்வி, மற்றும் திருமணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட‌ நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி,, 5 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 1516 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.33,63,950/-மும், 2,512 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக ரூ.25,12,000/-மும், 16 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.62,000/-மும், இயற்கை மரணமடைந்த 68 நலவாரிய உறுப்பனர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையாக ரூ.16,35,000/-மும், 12 பயனாளிகளுக்கு கண்கண்ணாடி வாங்க நிதியுதவியாக ரூ.6000/-மும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 175 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.3,95,000/-மும், 124 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக ரூ.1,24,000/-மும், இயற்கை மரணமடைந்த 5 நலவாரிய உறுப்பனர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையாக ரூ.1,17,000/-மும், ஓட்டுநர்கள் நல வாரியத்தின் மூலம் 28 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.82,000/- மும், 15 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியமாக ரூ.15,000/-மும், இயற்கை மரணமடைந்த ஒரு நலவாரிய உறுப்பனரின் குடும்பத்தாருக்கு நிவாரண தொகையாக ரூ.25,000/-மும் என தர்மபுரி மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புச்சாரா மற்றும் ஓட்டுநர் நலவாரியங்களின் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 4472 உறுப்பினர்களுக்கு ரூ.83,36,950/- மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண நிதியுதவி, கல்வி, மற்றும் திருமணம் உதவித்தொகைகள் உள்ளிட்ட‌ நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி 5 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வின் போது தர்மபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (கூடுதல் பொறுப்பு) கே.பி. இந்தியா உடனிருந்தார்.

Tags:    

Similar News