பாலக்கோடு அருகே கிராம மக்களே ஒன்று திரண்டு சீர் செய்த சாக்காடை கால்வாய்

பாலக்கோடு அருகேகிராம மக்களே ஒன்று திரண்டு சாக்காடை கால்வாயை சரி செய்தனர்.

Update: 2021-12-14 05:45 GMT

கிராம மக்களே பணத்தை திரட்டி ஜே.சி.பி மூலம் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சித்திரப்பட்டி கிராமத்தில் உள்ள 5 வது வார்டில் 150 குடும்பத்தில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு இதுவரை சாக்கடை கால்வாய் இது வரை அமைப்படவில்லை, சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டி பல வருடங்களாகவே அதிகாரிகளிடம் கிராம மக்கள் மன்றாடி வந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கைகளை யாரும் கண்டுக்கொள்ளாததால் சாக்கடை கால்வாய் இன்றி அவதிப்பட்டு வந்தனர். வீட்டிற்க்கு முன்பாகவே சாக்கடை கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தனர்.

இனி அரசாங்கத்தை நம்பினால் பலன் இல்லை என உணர்ந்து கொண்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவே சாக்கடை கால்வாய் அமைக்கும் முடிவிற்கு வந்தனர். அதன் படி கிராம மக்களே பணத்தை திரட்டி ஜே.சி.பி மூலம் இன்று சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News