தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்
ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்;
ஏரியில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளியை சேர்ந்த அன்னையா,22 லாரி டிரைவரான இவர் நேற்று மதியம் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற தீயணைப்புதுறையினர். நீண்ட நேரம் தேடி சடலமாக அன்னையாவின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.