பாலக்கோட்டில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் உலக நலம் வேண்டி மாபெரும் யாகம்

பாலக்கோட்டில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் உலக நலம் வேண்டி மாபெரும் யாகம் நடத்தப்பட்டது.;

Update: 2021-12-20 05:15 GMT

பாலக்கோட்டில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் நடைபெற்ற உலக நலம் வேண்டி மாபெரும் யாகம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திரெளபதி அம்மன் கோவில் வளாகத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் சித்தர் மூங்கிலடியார் தலைமையில் உலக நன்மைக்காகவும், தர்மம் தழைத்தோங்கவும், உலகில் அவ்வப்போது தோன்றும் கொடிய நோய்களிலிருந்து மக்களை காக்கவும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் தமிழ் மொழி பூசை செய்ய வேண்டியும், ஆதிசிவனார் வழங்கிய அருளோடும் அமுத தெய்வீக செந்தமிழ்மொழியிலே ஐயப்ப பக்தர்களால் சித்தர் நெறிப்படி, இந்து வேதப்படி ஐயப்ப யக்ஞம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வான்மீகி சித்தர், சித்தர்அடியார்கள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News