திமுகவின் பொய் முகத்தை வெளிபடுத்த வேண்டும்: கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பேச்சு
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டது குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
திமுகவின் பொய் முகத்தை மக்களுக்கு வெளிபடுத்த வேண்டும் என் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் காாிமங்கலம், பாலக்கோடு மாரண்டஅள்ளி, பென்னாகரம் தொகுதியில் பாப்பாரப்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் தருமபுரி மாவட்ட செயலாளரும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: பொதுமக்களுக்கு அதிமுகஆட்சியில் செய்யபட்ட ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மிகையாக பெற்று வழங்கப்பட்டது. பாலக்கோடு பேரூராட்சியில் பஞ்சப்பள்ளி அனையிலிருந்து கூடுதல் தண்ணீர் கிடைக்க வழி கழக அரசு வழிசெய்தது, இலவச பட்டா, முதியோர் உதவி தொகை, தாலிக்கு தங்கம், அம்மா இரு சக்கர வாகனம், இலவச வீடு, பள்ளி மாணவர்கள் 14 வகையான பொருட்கள் வழங்கியது. உள்ளிட்ட அதிமுக அரசின் பல்வேறு நலதிட்டங்கள் குறித்து தொண்டர்கள், கழக நிர்வாகிகள், ஒவ்வொரு வீடாக நேரிடையாக சென்று திண்ணைப்பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறவேண்டும்
திமுக அரசு இந்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தாமல் உள்ளதையும், அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டது குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து, வெற்றி பெற வழிவகை செய்ய வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் பொய் முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரம் இந்த உள்ளாட்சி தேர்தல். எனவே கட்சி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் ஒற்றுமையாக இணைந்து திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை எடுத்து சொல்ல வேண்டும். தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற முழு அர்பணிப்புடன் தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் காாிமங்கலம், பாலக்கோடு,பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் வார்டு வரையறை குறித்து பல்வேறு கருத்துகளை கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.