கோடை உழவால் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம்: வேளாண்துறை அட்வைஸ்

கோடைகாலத்தில் உழவு செய்வதால், படைப்புழு தாக்குதலை குறைக்கலாம் என்று, வேளாண்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

Update: 2021-04-22 05:01 GMT

கோடைக்காலங்களில் உழவு செய்தால் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம் என்று,  காரிமங்கலம் வட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்ட வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணி, கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்து கூறியதாவது: பங்குனி முதல்,  வைகாசி மாதம் வரை பெய்யும் மழையை, கோடை மழையாய் கருதுகிறோம். கோடை காலத்தில் உழவு செய்வதால், மழை நீரானது 15 செ.மீ வரை ஆழத்தில் செல்லும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படுகிறது.

நடப்பு பருவம் மற்றும் இனிவரும் காலங்களில் மக்காச்சோளம் பயிரில் படை புழுவின் தாக்குதல் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, பயிரிடுவதற்கு முன்பாகவே விவசாயிகள் கோடை உழவு செய்வதன் மூலம், கூட்டுப்புழுக்கள் அடியில் இருந்து வெளியேற்றி, அவற்றை பறவைகள் உண்பதால், இயற்கை முறையில் செலவின்றி படைப்புகளின் உப்புத் தன்மையை கட்டுப்படுத்தலாம்.

மேலும், உழவு செய்வதால், மண்ணில் ஈரம் காக்கப்படுவதுடன் மண்ணரிப்பையும் தடுக்கலாம். கோடை உழவினால் படைப்புழுக்கள் மட்டுமின்றி இதர பூச்சிகள் மற்றும் வண்டுகளின் கூட்டு பொருட்களும் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு அழிக்கப்படுகிறது என்று, அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News