கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்: தலைமை ஆசிரியை, ஆசிரியர் சஸ்பெண்ட்

பாலக்கோடு அடுத்த பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை, ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2022-04-04 13:00 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அடுத்த  கும்மனூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 1 முதல் 8 வரை 81 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லை.

இதனால் பள்ளி மாணவர்கள் குடத்தை எடுத்துச் சென்று, கிராமத்தில் தரைக்குள் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில், ஆபத்தை உணராமல் குணிந்து, தண்ணீர் எடுத்து சென்று, ஆசிரியர்கள்  கழிவறையை சுத்தம் செய்ய தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதில் தண்ணீர் தொட்டியில் சிறிது தவறினாலும் கூட, தொட்டிக்குள் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையுள்ளது. இவ்வாறு மாணவர்கள் கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச்செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து  பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்  தொடர்ந்து இது போன்று பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கும் செயல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், பாலக்கோடு அடுத்த கும்மனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருத்து ஆபத்தான முறையில் மாணவர்கள், தண்ணீர் எடுத்து சென்று கழிவறையில் நிரப்பிய, விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆரியை சென்னம்மாள் மற்றும் ஆசிரியர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News