வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் சிறப்பு திருத்த முகாம்

வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் மின் இணைப்பு மாற்றம், பெயர் மாற்றத்திற்கான சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-08 05:15 GMT

வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு திருத்த முகாம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை துணை மின் நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கும் திட்டத்திக் கீழ் விவசாய பெருமக்களின் விண்ணப்பங்களின் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம், கிணறு மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள மின்சார துறை சார்பில் சிறப்பு திருத்த முகாம் வெள்ளிசந்தை துணை மின் நிலையத்தில் கோட்ட செயற்பொறியாளர் வனிதா தலைமையில் நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்ட மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் முகாமினை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இம்முகாமில் காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உட்கோட்டத்திற்குட்பட்ட ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மின் இணைப்பு மாற்றம் சம்மந்தமாக மனுக்களை அளித்தனர். முகாமில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 300க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் அருன் குமார், அழகு மணி, சங்கர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி பொறியாளர்கள் ரமேஷ், மாதேஷ், மோகன் குமார், அருணகிரி, பாலமுரளி, அருள் முருகன், சரவணன், செந்தில்குமார், வடிவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News