பாலக்கோடு ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் வாடகைக்கு கடை வேண்டுமா?

பாலக்கோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாடகைக்கு கடை தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-02 00:15 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி 

இது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தர்மபுரி விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தில் முதன்மை பதப்படுத்தும் நிலையம், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், தீர்த்தகிரி நகர், எம் ஜி ரோடு, பாலக்கோடு-636808 முகவரியில் இயங்குகிறது.

இங்கு, கட்டப்பட்டுள்ள 9 கடைகள் (ஒரு கடையின் பரப்பு 6X4.5 சதுர மீட்டர்) காய்கள், பழங்கள் மற்றும் வேளாண் விலை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் ஆர்வலர் குழு மற்றும் விவசாயிகளுக்கு, 11 மாதங்களுக்கு வாடகைக்கு விட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் ஆர்வலர் குழு, விவசாயிகளை தேர்வு செய்து கடைகள்,  வாடகை விட அனுமதிக்கப்படும்.

மேலும் விண்ணப்பங்களை,  செயலாளர், தர்மபுரியில் உள்ள தர்மபுரி விற்பனைக்குழு, மதிகோன்பாளையம், திருப்பத்தூர் மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்காணும் முகவரிக்கு 08.12.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News