மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் அனுமதியின்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-26 15:14 GMT

கோப்பு படம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பேரூராட்சியில்,  மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பதாக பொதுமக்கள் சார்பில்,  பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தலைமையில் இளநிலை பொறியாளர், பொது சுகாதார ஆய்வாளர், ரவீந்திரன் ஆகியோர் பேரூராட்சியில் 2 ,10 மற்றும் 11 வது வார்டுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை எடுப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அனுமதி இன்றி குடிநீர் எடுக்க பயன்படுத்திய 11 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News