அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

மாரண்டஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

Update: 2021-09-13 02:15 GMT

மாரண்டஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் பரவும் அபாயம். 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது .இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். தங்கும் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இப்பள்ளியில் பலமாதங்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதில் தூர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய் தாக்குதலால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பள்ளியில் சரியான கழிவு நீர் கால்வாய் இல்லாததால் வெளியேறும் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை காலங்களில் வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் இணைந்து தேங்குவதால் சில நாட்களிலே துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசு உற்பத்தியாகி உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் சூழல் உருவாகிறது.

இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பள்ளி சுற்றுசுவர் பழுதடைந்து பெரிய ஓட்டை விரிசல் இருப்பதால் விஷப்பூச்சிகள் வகுப்பறைக்குள் நுழையும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீரை அகற்றி கொசு தொல்லையில் இருந்து மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News