தர்மபுரி அருகே பி.டி.ஏ. தலைவரை மாற்றக்கோரி தலைமை ஆசிரியருக்கு திமுக மிரட்டல்
தர்மபுரி அருகே பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரை மாற்றக்கோரி தலைமை ஆசிரியருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.;
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் பேகாரஹள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், காரிமங்கலம் திமுக ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு மிரட்டி வருகின்றனர்.
அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். இதனை ஊர் பொதுமக்கள் அனைவரும் கண்டிக்கிறோம் எனவும், தற்போது சிறப்பாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
அதுவரை புதிய பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நியமனம் செய்யும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர்,பேகாரஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பொன்னுவேல், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாணிக்கம், முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் மாது உள்ளிட்டோர் புகார் மனு அனுப்பி உள்ளனர்.