திருச்செங்கோடு கோழிப்பண்ணை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு
திருச்செங்கோடு கோழிப்பண்ணை உரிமையாளர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மர்மமான முறையில் உயிரிழப்பு;
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 46; கோழிப்பண்ணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் நண்பருடன் பைக்கில் வேலை விஷயமாக கிருஷ்ணகிரிக்கு சென்று திரும்பினார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே, தாகம் எடுத்ததால் பைக்கை நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒரு வீட்டில் தண்ணீரை வாங்கி குடித்துள்ளார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, அவரது நண்பர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்