பாலக்கோட்டில் இருளில் மூழ்கும் ஒகேனக்கல் பிரிவு சாலை: மிரளும் மக்கள்
பாலக்கோட்டில் இருளில் மூழ்கும் ஒகேனக்கல் பிரிவு சாலையால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து தருமபுரி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினன்தோறும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதில், ஒகேனக்கல் பிரிவு ரோட்டில் அதிவேகத்தில் தருமபுரியை நோக்கி செல்லும் வாகங்கன், பிரிவு ரோட்டில் வளையும் போது எதிர்பாரத விதமாக அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்பு சேதங்கள் ஏற்படுகிறது.
ஒகேனக்கல் பிரிவு சாலையில், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரத்தில் இருச்சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் விபத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பிரிவு நெடுஞ்சாலையின் நடுவே தடுப்பு சுவர் மற்றும் உயர்மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.