பாலக்கோடு அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்

மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அலுவலக கட்டிடம், கழிவறையை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-05-04 05:00 GMT

சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சியில் பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், ஆத்துக்கொட்டாய், நல்லூர், ரெட்டியூரான்கொட்டாய், எருதுகூடஹள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினந்தோறும் பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர் .

இந்த ஊராட்சிக்கு நிரந்தர ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படாததால் அருகில் உள்ள ஊராட்சி செயலாளர் வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பல வருடங்களாக ஊராட்சி மன்றக் கட்டிடம் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனே காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

மேலும் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் மத்திய அரசு திட்டமான ஸ்வச்ச பாரத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கழிவறை முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. ஊராட்சி மன்ற கட்டிடத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகூட இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அலுவலக கட்டிடம், கழிவறையை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News