பாலக்கோடு அருகே கூடைப்பந்து பயிற்சியாளர் வீட்டில் நகை திருட்டு

பாலக்கோடு ஸ்போர்ட்ஸ் கோச் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் நகை திருடு போனது.

Update: 2021-04-03 08:48 GMT

தருமபுரி அருகே கூடைப்பந்து பயிற்சியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, புலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் பழனி 31. இவர் பெங்களூருவில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி மகனை பார்ப்பதற்காக மனோகரன் தனது குடும்பத்துடன் பெங்களூரு சென்றார். இதன் பின்னர் நேற்று மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதைப்  பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் கீழே வீசப்பட்டிருந்தது.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகையும் காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு சுமார்.ரூ.5லட்சமாகும். இதனையடுத்து மனோகரன்  மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News