தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 100 பேர் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது என்பது வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் முருக்கம்பட்டி ஊராட்சி மேல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி 100 பேர், அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.