பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் வாக்களிப்பு
பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம், கெரகோடஅள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.;
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிடுகிறார்.
அவர் இன்று தனது வாக்கை பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம், கெரகோடஅள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.இதன் பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து தனது குடும்பத்தார் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வாக்களித்ததை காண்பிக்கும் விதமாக ஒரு விரலை உயர்த்தி காண்பித்தார்.