காரிமங்கலம் பேரூராட்சியில் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைவு
காரிமங்கலம் பேரூராட்சியில் மாற்றுக்கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி க்குட்பட்ட 13வது வார்டு வியபாரி கொட்டாய் பகுதியில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பா.ம.க., திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆண்களும் பெண்களும், விலகி முன்னாள் அமைச்சர், தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
இணைந்த அனைவருக்கும் கழக கரை போட்ட துண்டு அணிவிக்க பட்டு வேட்டி சேலை வழங்கப்பட்டது.
பின்னர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசுகையில், நான்கு மாத திமுக ஆட்சியில் அம்மாவால் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் தவிர்த்து உள்ளது.பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தாமல் தடை செய்துள்ளது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 100 யூனிட் மின்சாரம் அனைத்து குடும்பத்திற்கும் இலவசமாக வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அதனை நிறைவேற்றினார் ஆனால் திமுக அரசு வந்த வுடன் இன்று மின் கட்டணம் கட்டுகிற சூழல் உள்ளது. திருமண உதவி தொகை கான்கிரீட் வீட்டில் இருந்தால் இல்லை.திருமண மண்டபத்தில் திருமணம் செய்தால் இல்லை என சட்டத்தை திமுக அரசு மாற்று கிறது.கொடுப்பதற்க்கு பதிலாக போகாத ஊருக்கு வழி காட்டுகிறது திமுக. திருமண உதவி திட்டத்தை தடுப்பதற்காகவே திமுக இது போன்று செய்கிறது. பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் கழக அரசில் வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே இது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டமாகும். ஆனால் லேட்டாப் வழங்க இயலாது என்கிறார்கள். இப்படி அதிகபட்சமான திட்டங்களை திமுக அரசு கொடுக்காமல் தடுக்கிறது. எதிர் வரக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஆகிய தேர்தல்கள் வர இருக்கிறது.அதில் கழகம் அமோக வெற்றி பெறும்.
பாலகோடு காரிமங்கலம் பகுதிகளில், மருத்துவ மனை, கல்லூரிகள் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நீர் பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு விட்டது.ஆனால் திமுக அரசு காலதாமத படுத்துகிறது.காலதாமபடுத்தினாலும் நிறுத்தமுடியாது.நிறைய திட்டங்கள் கழக அரசில் கொண்டு வரப்பட்டது.ஆனால் நான்கு மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு அன்றாட பயன்படக்கூடிய திட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் பேரூர் கழக செயலாளர் காந்தி, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சரவணபிரபு, வழக்கறிஞர் பாரதி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சந்திரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கள் மாரிமுத்து,மதன்குமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கெளதமன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குட்டி, ராமசந்திரன், மற்றும் ராமகிருஷ்ணன், பெரியண்ணன், ஆறுமுகம், குமார், பெரியசாமி, மோகன் கண்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.