23 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரிகள்: ஆடுகள் பலியிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை

காரிமங்கலம் அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரிகள் நிரம்பியதால் ஆடுகள் பலியிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2021-11-21 04:30 GMT

ஏரி மதகு பகுதியில் பூக்கள் தூவியும் ஆடுகளை பலியிட்டும் மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக காரிமங்கலம் ஒன்றியம் பூமாண்டஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மோதூர், போலம்பட்டி, சென்ராயனஅள்ளி உட்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரிகள் நிரம்பியதால் பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ஏரி மதகு பகுதியில் பூக்கள் தூவியும் ஆடுகளை பலியிட்டும் சிறப்பு பூஜை நடத்தினர்.

பூஜையில் பஞ்சாயத்து தலைவர் கவிதா நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், துணைத்தலைவர் மல்லிகா பழனி, பிடிஓக்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி, தாசில்தார் சின்னா மந்திரி கவுண்டர், மாரியப்பன், கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவர் மாது, வங்கி இயக்குனர் சின்னசாமி, வார்டு உறுப்பினர் கார்த்தி, செயலாளர் குணசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News