பாலக்கோடு அருகே துணிகட்டி மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு பெரு விழா
பாலக்கோடு அருகே துணிகட்டி மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது.;
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த துணிகட்டி மாரியம்மன்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கருக்கமாரனஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விநாயகப் பெருமான் மற்றும் அருள்தரும் துணிகட்டி மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைப்பெற்றது. இந்த விழா, கடந்த 5ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, அதை தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல் காப்பணிவித்தல், இருவினை நீக்கும் இறைவிக்கு இன்பத்தமிழால் இரண்டாம் கால வேள்வி நடைப்பெற்றது.
இதனையடுத்து திருக்குடங்கள் புறப்பட்டு விநாயகப்பெருமான் மற்றும் துணி கட்டிமாரியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழானது இனிதே நடைப்பெற்று. அதைத் தொடர்ந்து பெருந்திருமஞ்சனம், நடைப்பெற்று பேரொளி வழிபாட்டுடன் திருமுறை விண்ணப்பத்துடன் திருக்குட நன்னீராட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்த வேள்வி பணிகளை பாலக்கோடு பால்வண்ணநாதர் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக சிவனடியார்கள் செய்தனர். அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி, காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.