தர்மபுரி அருகே பைக் மீது அரசு பஸ் மோதல்: தாபா உரிமையாளர் சாவு
தர்மபுரி அருகே பசுமை நகரில் பைக் மீது அரசு பஸ் மோதியதில் தாபா உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் பாவடி தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மாதையன் வயது 32 . இவர் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் தனது சூப்பர் எக்ஸெல் மொபட்டில் வீட்டிற்கு இன்று மாலை திரும்பி கொண்டிருந்தார். பசுமை நகர் அருகே மாதையன் வந்து கொண்டிருந்தபோது, தர்மபுரியில் இருந்து ஓசூர் செல்லும் அரசுப் பேருந்து அதிவேகமாக வந்து அவர் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புகாரின் பேரில் தர்மபுரி நகர காவல் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.