தருமபுரி: மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்ற இருவர் கைது
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.;
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில், கஞ்சா விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த போது, அம்பேத்கார் பகுதியில் உள்ள ஜெயராமன் (வயது .63), போயர் தெருவில் குமார் (வயது.40) இருவரும் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யும்போது பிடிபட்டனர்.
இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ 300 கிராம் எடையுள்ள சிறு சிறு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.