தர்மபுரி, கெரகோடஅள்ளி, மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதம்

காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில், மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருள் எரிந்து சேதமானது.

Update: 2021-06-20 02:00 GMT

தர்மபுரி அருகே மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில், மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருள் எரிந்து சேதமானது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளியில், அந்தோணிசாமி(60) என்பவர் மெத்தை, தலையனை, கால்மிதி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில், மெத்தை தயாரிக்க தேங்காய் நார் பண்டல்கள், மெத்தைகள், தலையணைகள், மிதியடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று  தொழிற்சாலையில் மின் கசிவினால் திடீரென  ஏற்பட்ட தீ விபத்தால் அங்குள்ள தேங்காய் நார் பண்டல்கள் எரியத்துவங்கியது. அங்குள்ள பணியாளர் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும், தீயை அணைக்க முடியாமல், தீ அதிகளவு பரவுத்துவங்கியதால், பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் தொழிற்சாலையில் இருந்த தேங்காய் நார் பண்டல்கள், மெஷின்கள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் மிதியடிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News