காரிமங்கலம்: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்து வையுங்கள் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் மற்றும் பொதுமக்களுக்கு பழச்சாறு, தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பழங்கள் மற்றும் ஜூஸ் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.