தொடர் மழையால் பாலக்கோடு அருகே வீடு இடிந்து முதியவர் பலி

பாலக்கோடு அருகே வீடு இடிந்து முதியவர் பலி, இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-11-14 07:15 GMT
ஈரோட்டில் பெண் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் ஏரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்ன பையன் (வயது 61). இவர் தனது மகனுடன், அதே பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சின்னப்பையன் சாப்பிட்டு விட்டு அவரது பழைய வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அவரது குடிசை வீடு இடிந்து சின்ன பையன் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

நேற்று தந்தை சாப்பிட வராததால் அவரை அழைத்து வரச் சென்ற அவரது மகன் மகாலிங்கம், சுவர் இடிந்து விழுந்து தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து அங்கு விரைந்த மகேந்திர மங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News