பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சியின் 136 வது ஆண்டு துவக்க விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சியின் 136 வது ஆண்டு துவக்க விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.;

Update: 2021-12-29 00:30 GMT

பாலக்கோட்டில், இனிப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர். 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர காங்கிரஸ் கட்சி சார்பில்,  காங்கிரஸ் கட்சியின் 136 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு,  பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவு தூணில்,  கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு நகர தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில செயற்கு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தீர்த்தாரமன் கட்சி கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்,

இந்நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவர் பாலஜி குமார், வட்டார தலைவர் ஜனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சீதாராமன், நகர செயலாளர் ரகமத், மாநில பேச்சாளர் முருகேசன் தொழிற்சங்க தலைவர் சித்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுக்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News