கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டு பயணம்: விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆர்டிஓ
Speech On Traffic Rules - பாலக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆர்.டி.ஓ
Speech On Traffic Rules - பாலக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் பேருந்துபடிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தர்மபுரி பாலக்கோட்டில் பள்ளி கல்லூரி மானவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் பேசுகையில், சாலை விதிமுறைகளை குறித்து மாணவர்களுக்கு புரஜெக்டர் திரை காட்சி மூலம் தெளிவாக விபத்து படக்க காட்சிகளை விளக்கினார், மாணவ மாணவிகள் நடக்கும்போது வலதுபுறம் நடக்கவும் சாலையை கடக்கும் போது சாலையின் இருபுறமும் கவனித்து பின் செல்லுதல், பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். டூவீலர்களில் இருவர்தான் செல்ல வேண்டும். மூன்று நான்கு நபர்கள் பயணிப்பதால் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்க நேரிடும் உள்ளிட்ட சாலை பாதுப்பு விதிமுறைகளை குறித்து விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2