தர்மபுரி அருகே கிணற்றில் கவிழ்ந்த கார்: மீட்புப்பணியில் தீயணைப்புப்படையினர்

தர்மபுரி அருகே 4 பேருடன் சென்ற கார் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுது. மீட்புப்பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-11-16 12:15 GMT
கிணற்றில் விழுந்தவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

தர்மபுரி அருகே காரிமங்கலம் அடுத்த பொன்னேரியில், மேட்டூரிலிருந்து பெங்களூரு நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தர்மபுரி அடுத்த பெரியாம்பட்டி அருகில் செல்லும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காார் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள விவசாய கிணற்றில் தலைகுப்புற விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அந்த காரில் இருந்த குடும்பத்தலைவி உமா என்பவரை மட்டும் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக மீட்டனர்.

அவருடைய கணவர், குழந்தைகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக தர்மபுரி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News