மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது: போலீசார் அதிரடி
மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் ஜெயராமன் (வயது .60) என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி செடியின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடியை அழித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.