பேருந்து படிக்கட்டு பயணம் : பள்ளி மாணவர்களின் மரண விளையாட்டு
உயிர் பயமின்றி பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கினால் ஏற்படும் விபரீதத்தை உணர வேண்டும்
பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்து மரண விளையாட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி இருந்து பாலக்கோடு நோக்கிவரும் அரசு பேருந்தில் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் 5ம் எண் பேருந்தில் பாலக்கோடு வந்து செல்கின்றனர்.
வாழைத்தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிரம்பி வழிவதால் அங்குள்ள மாணவர்கள் போட்டி போட்டு படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை 9.15 மணி பேருந்தை தவற விட்டால் 10 மணி வரை பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் காரணமாக பள்ளிமாணவா்கள் மற்றும் கல்லுரி மாணவா்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
சில பள்ளி மாணவா்கள் அரசு பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துனா்களை ஒருமையில் பேசியும், தகராறில் ஈடுபட்டு வரும் .சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கல்லுரி மற்றும் பள்ளி மாணவா்கள் மிரட்டலால் பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துனா் கடும் மன உழைச்சலுடன் பணி செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே, காலை மாலை வெ பள்ளி, கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.