பாலக்கோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜகவினர் சிறப்பு வழிபாடு
பாலக்கோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டு திறப்பு விழாவினை காண வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக தெய்வீக காசி ஒளிமயமான காசி என்ற நிகழ்ச்சி மூலம் நரேந்திர மோடி வாரணாசி கோவிலுக்கு செல்லும் நிகழ்வை காணொளி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகமெங்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடைப்பெற்றன.
அதனையொட்டி பாலக்கோடு நகர பாஜக சார்பில் நகர தலைவர் பி.கே.சிவா தலைமையில் பாலக்கோட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைப்பெற்றது. இதில் ஏராளமான கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.