பாலகோட்டில் ஆட்டோ ஓட்டும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலகோட்டில் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-10-22 05:45 GMT

பாலகோட்டில் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டும் சிறுவர்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி, மல்லாபுரம் கூட்ரோடு, பொப்பிடி, கேசர் குளி அணை, பாப்பாரப்பட்டி மற்றும் காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவ மாணவிகள் ஆசிரியைகள் ஆட்டோவில் சென்று வருகின்றனர்.

இதில் பெரும்பாலான ஆட்டோக்களை 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு  லைசன்ஸ் இல்லை .மேலும் யூனிஃபார்ம் அணிவதில்லை. பாலக்கோடு போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News