பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-28 05:15 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய  எருதுவிடும் விழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த  மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவில் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் பிஎன்பி இன்பசேகரன் கொடியசைத்து விழாவினை தொடக்கி வைத்தார் மற்றும் மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும்  அதிகமான காளைகள் பங்கேற்று ஓடுபாதையில் சீறிப் பாய்ந்து ஓடின. 

எருது விடும் விழாவை கண்டுகளிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News