காரிமங்கலம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி சாவு

காரிமங்கலம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-23 14:15 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பூமாண்டஅள்ளி பஞ்சாயத்து போலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரண்யா இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மோனிகா 10 அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் இன்று மாலை தனது வீட்டு அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஆழமான பகுதிக்கு சென்ற மோனிகா நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீண்ட நேரமாகியும் மகள் வராததால் அவர் குடும்பத்தினர் அவரை தேடிய நிலையில் ஏரியில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து விஏஓ கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News