75 கலைஞர்கள், 75 நிமிடம் 75 நொடி இசையில் 75 மரக்கன்றுகள் நடவு: உலக சாதனை நிகழ்வு

பாலக்கோடு அருகே கோட்டூர் கிராமத்தில் கிராமிய இசைகலைஞர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-09-05 15:00 GMT

பாலக்கோடு அருகே கோட்டூரில் விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சியில் கிராமிய இசைக் கலைஞர்களின் நாடகம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 75 நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் ஒன்றிணைந்து கிராமிய கலைஞர்களின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 75 நாட்டுப்புற கலைஞர்கள் 75 நிமிடம் 75 நொடி இசை இசைத்து 75 மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சி அழிந்துவரும்  நாட்டுப்புற கலையை வளர்க்கும் நோக்கிலும், நாட்டுப்புற கலையை உலகிற்கு வெளிப்படுத்தும் விதமாகவும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வளர்ந்துவரும் இளைஞர்கள் மத்தியில் கிராமிய கலை நோக்கி ஈர்க்கும் வகையில்.தாரை, தப்பட்டை, பம்பை, மயிலாட்டம், ஓயிலாட்டம், தெருக்கூத்து முதலிய அனைத்து நிகழ்ச்சிகளும் ஓரே சமயத்தில் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாதணை கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News