தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி: கலெக்டர் துவக்கிவைப்பு

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-22 14:46 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்து, மாவட்டம் முழுவதும் ஒரு இலட்சம் மரக்கன்று நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெறும் மாபெரும் களநீர் தரப்பரிசோதனை நிகழ்வினை தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்து, மாவட்டம் முழுவதும் ஒரு இலட்சம் மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 251 கிராம ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் களநீர் தரப்பரிசோதனைப் பெட்டிகள், அந்தந்த ஊராட்சி செயலர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வழங்கப்பட்டு, எவ்வாறு களநீர் தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று (22.03.2022) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இந்த களநீர் தரப்பரிசோதனைப் பெட்டிகள் மூலம் மாபெரும் களநீர் தரப்பரிசோதனை நிகழ்வு மற்றும் நிலத்தடி நீர்-அறிந்தும் அறியாததும் குறித்த விழிப்புணர்வு (Ground Water: Making the Invisible Visible) ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தண்ணீரின் தரத்தினை பரிசோதனை செய்யும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ச.திவ்யதர்சினி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெறும் மாபெரும் களநீர் தரப்பரிசோதனை நிகழ்வினை இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 251 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான இன்று முதல் வருகின்ற ஜூன் 5 முடிய ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 10,000 மரக்கன்றுகள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு இலட்சம் மரக்கன்றகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகராட்சி, அனைத்து பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் இதர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் இசங்கரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் )  சீனிவாச சேகர், உதவி நிலநீர் வல்லுநர் எஸ்.கல்யாணராமன் மற்றும் உதவிப் பொறியாளர் இரா.இரகோத்சிங் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News