ஏலகிரி ஊராட்சியில் முறைகேடு: விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஏலகிரி ஊராட்சியில் ஏரிவேலை, தொகுப்பு வீடுகள் கட்டியதில் முறைகேடு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-08 09:00 GMT

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் என்.முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகி ஜி.அருணகிரி முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டச் செயலாளர் ஜெ.பிரதாபன், மாவட்டத் தலைவர் ஜி.மாதையன், மாவட்ட துணை செயலாளர் ஜி.பச்சாகவுண்டர், மாவட்ட துணைத் தலைவர் ஜி.ராஜகோபால் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்பாட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியம்,ஏலகிரி ஊராட்சியில் அடிப்படை பிரச்னைகள் ஏரிவேலை, தொகுப்பு வீடு, ஒகேனக்கல் குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதி, மயான தகன மேடை, பொது கழிப்பிடம், மாணவர் விடுதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மேலும் ஏரி வேலை திட்டம் மற்றும்தொகுப்பு வீடு கட்டியதில் நடைபெற்ற முறைகேடுகளை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் என்.பி.ராஜீ, ஒன்றியத் தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் மல்லையன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News