விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு.

20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா தமிழில் மந்திரங்கள் முழங்க நடைபெற்றது

Update: 2022-02-06 07:20 GMT

 விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் எழுந்தருளியுள்ள, 1500 ஆண்டுகள் பழமையான, விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், 20 வருடங்களுக்குப் பின்பு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு, கோ பூஜை, அஸ்வ பூஜையுடன், ஆறுகால யாகசாலை உடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திர முழக்கத்துடன், மூலவர் விருத்தகிரீஸ்வரரின் கோபுர கலசம், விருத்தாம்பிகை கோபுர கலசம், 5 விமான கோபுர கலசம், ஆழத்து விநாயகர் கோபுர கலசம், முருகன், சண்டிகேஸ்வரர் மற்றும் 5 கொடிமரம் உட்பட அனைத்திற்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் அனைத்து கோபுரங்களுக்கும், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

இதில் முக்கியமாக கோபுரக்கலசத்தில் நீர் ஊற்றும் போது 1000 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மந்திரங்கள் ஒலித்தது

தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவையினர் வைத்த கோரிக்கையையடுத்து தமிழ் ஓதுவாளர்களைக் கொண்டு கோயில் கோபுரக் கலசத்தில் தமிழ் மொழி ஒலித்தது.  சிதம்பரம் தெய்வத்தமிழ் பேரவை ஓதுவார்கள் பங்கேற்று திருமுறை பாடல்களை பாடினர்.

கலசத்தில் தமிழ் மந்திரங்கள் ஓதி திருநீராடிய போது அனைவரும் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற மந்திரம் வான் பிளக்க ஒலித்தனர்.

தமிழில் மந்திரங்கள் ஒலித்து குடமுழுக்கு நடைப்பெற்றது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News