தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2021-03-24 13:25 GMT
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை
  • whatsapp icon

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொருளாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கடந்த வாரம் தனது வேட்புமனுவை விருதாச்சலம் தொகுதிக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரி சோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனை அடுத்து அவரது மனைவிக்கும்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கும்  தொற்று உறுதியானதை அடுத்து, தற்போது அவருடைய சகோதரியும் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளருமான  பிரேமலதா விஜயகாந்துக்கு கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று மதியம் விருதாச்சலம் புறவழி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால்   விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News